தி.நகர் மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

164.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
சென்னையின் மிகவும் முக்கிய வணிகப்பகுதியாக தியாகராய நகர் (தி.நகர்) திகழ்கிறது. இதன் காரணமாக தி.நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும்.
இதனிடையே, தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 164.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தி.நகர் மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ள புதிய மேம்பாலத்தால் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பாக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புதிய மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






