ஜெயலலிதா அரசு என நிரூபிக்க போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் - தினகரன்

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சட்டமன்றத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ தினகரன் பேசினார்.#TTVDhinakaran
ஜெயலலிதா அரசு என நிரூபிக்க போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் - தினகரன்
Published on

சென்னை

சட்டமன்ற கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. வரும் 12ம் தேதி வரை சட்டமன்றம் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு முதல் முறையாக சென்றுள்ள தினகரன், இன்றைய கூட்டத்தில், முதன்முறையாக தினகரன் சட்டமன்றத்தில் பேசினார்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தினகரன் வலியுறுத்தினார்.போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில், முதலமைச்சர் பழனிசாமி தலையிட்டு தீர்வுகாண வேண்டும். என கூறினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான ஊதிய உயர்வு வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என விளக்கமளித்தார்.

#BusStrike #TNAssembly #TransportWorkers | #TTVDhinakaran |#EdappadiPalanisamy

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com