

சென்னை
தமிழக அரசின் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 7 பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ள அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* ரயில்வே பணிகள் திட்டத்துக்கு ரூ.513.66 கோடி ஒதுக்கீடு .
* 2018 - 19 தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இல்லை.
* மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின் வழங்க ரூ.60.58 கோடி ஒதுக்கீடு.
* சுகாதாரத்துறைக்கு ரூ.11,638.44 கோடி ஒதுக்கீடு.
* 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
* சத்துணவுத் திட்டத்துக்கு சமூக நலத்துறை வாயிலாக ரூ. 5,611.62 கோடி ஒதுக்கீடு
* 2018- 19 இல் 10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறை மேற்கொள்ளப்படும்.
* செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
* நெல் உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* குடிமராமத்து பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.482.84 கோடி ஒதுக்கீடு.
* மாற்றுத்திறனாளிகள் சுயவேலைவாய்ப்பை ஊக்குவிக்க நிதி ரூ. 10,000 இல் இருந்து 25,000 ஆக உயர்வு.
* தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் மூலம் ரூ.35 கோடி வழங்கப்படும்.
* மாற்றுத் திறனாளிகளின் சுயவேலைவாய்ப்பு உதவி 1,000 பேரில் இருந்து 2,000 பேராக உயர்வு.
* 2017 ஜூலை முதல், 2018 பிப். வரை ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.632 கோடி பெறப்பட்டுள்ளது.