பொறியியல் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
பொறியியல் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு
Published on

சென்னை:

தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் மற்றும் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு 06.05.2024 முதல் 06.06.2024 வரை நடைபெற்றது. அதில் 2,49,918 மாணாக்கர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனர் மற்றும் 2,06,012 மாணாக்கர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். தற்பொழுது மாணாக்கர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 10.06.2024 மற்றும் 11.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.

இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணாக்கர்கள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து, பதிவு கட்டணம் செலுத்தி, தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com