கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி அறிவிப்பு

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கஜா புயல் கடலோர மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்டவற்றின் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

இதனால் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. லட்சக்கணக்கான மின் கம்பங்களும் சேதமடைந்தன. தொடர்ந்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொண்டது.

இந்நிலையில், கஜா புயலால் சில தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. ஒத்தி வைத்தது. அந்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதில், கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு டிசம்பர் 23ந்தேதி நடைபெறும் என தெரிவித்து உள்ளது. டிசம்பர் 23ந்தேதி நடக்கவிருந்த உதவி நூலகர் மற்றும் இளநிலை கல்வெட்டாளர் தேர்வு டிசம்பர் 26ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com