

26 காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி கூறியிருப்பதாவது: துணை ஆட்சியர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்ட பதிவாளர், தொழிலாளர் உதவி ஆணையர் ஆகிய பதவிகளில் 26 காலியிங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 30-ம் தேதி (இன்று) தொடங்கி ஜூலை 29-ம் தேதி முடிவடையும். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 6-ம் தேதி அன்று நடைபெறும். குரூப்-1 தேர்வை பட்டதாரிகள் எழுத தகுதியுடையவர் ஆவர். வயது வரம்பு பொதுப்பிரிினருக்கு 34 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும். மொத்தம் 26 காலிப் பணியிடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 26 காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவாக இருப்பதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், விரைவில் காலியிடங்கள் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.