33 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1 தேர்வு

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 33 மையங்களில் நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 10 ஆயிரத்து 115 பேர் எழுத உள்ளனர்.
33 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி.குரூப்-1 தேர்வு
Published on

ஈரோடு மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 33 மையங்களில் நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வை 10 ஆயிரத்து 115 பேர் எழுத உள்ளனர்.

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு, குரூப்-1-ல் 92 பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இந்த தேர்வு 33 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரத்து 115 பேர் எழுதுகிறார்கள். தேர்வினை கண்காணிக்க 9 பறக்கும் படை அலுவலர்களும், 7 நடமாடும் குழுவும், 34 ஒளிப்பதிவாளர்களும், 33 கண்காணிப்பு அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட போலீஸ் துறை மூலம் ஈரோடு மாவட்ட கருவூலத்தில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பஸ் வசதி

இன்று தேர்வு நடைபெறும் மையங்களுக்கு போலீஸ் துறை மூலம் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ளவும், நடமாடும் குழு வாகனத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீசார் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் தேர்வு எழுதுவோர் வசதிக்காக தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளன.

மேலும் மின் வாரியத்தினர் மூலம் தேர்வு நடைபெறும் இடங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், மருத்துவத்துறை மூலம் தேர்வு எழுதுபவர்கள் நலனுக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com