டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

வருகிற 27- ந் தேதி காலையில் குரூப் -1முதல்நிலைத் தேர்வு நடைபெற இருக்கிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், குரூப்-1, முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை tnpscexams.in என்ற இணையத்தில் விண்ணப்ப எண் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 05/2026, நாள் 23.06.2026-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி- பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை (கொள்குறி வகை) (ஒளிக்குறி உணரி) தேர்வு 27.09.2026 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளம் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com