டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி நடைபெற்றது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி நடைபெற்றது. துணை ஆட்சியர், டிஎஸ்பி, உதவி ஆணையர், உதவி இயக்குநர், உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட 70 காலியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 2.49 லட்சம் பேர் எழுதினர்.

இந்த நிலையில் ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள முதன்மைத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள் ஆவர். முதன்மை எழுத்துத் தேர்வு 01.12.2025 முதல் 04.12.2025 வரை சென்னையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை https://tnpsc.gov.in/document/finalresult/04_2025_GR_I_PUB_LIST_28.08.2025.pdf என்ற இணைப்பை கிளிக் செய்து, காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com