திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கியது.
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
Published on

திருச்சி, 

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. இதில் குரூப் 2 மற்றும் குரூப் 4 போட்டி தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. தொடக்க நாளான நேற்று இந்த பயிற்சி வகுப்பில் 110 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பன்னீர்செல்வம், கிளை நிலை வேலைவாய்ப்பு அலுவலர் சரிபா ராபியா ஆகியோர் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசியதுடன், தேர்வை எதிர்கொள்வது குறித்த நுணுக்கங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com