காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கலந்தாய்வை நடத்த வைகோ வலியுறுத்தி உள்ளார்.
காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
Published on

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா கொடுந்தொற்று காரணமாக, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் 2019-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்த முடியவில்லை. இந்நிலையில், மூன்றாண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு ஜூலை 24-ந்தேதி இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, இந்த ஆண்டு மார்ச் 24-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கான காலிப் பணி இடங்கள் 10,117 என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மூன்றாண்டுகள் தேர்வுகள் நடத்தப்படாத நிலையை கவனத்தில் கொண்டு, பறிபோன 30 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்புகளையும் இணைத்து, அவைகளுக்கான தேர்வையும், கலந்தாய்வையும் இந்த ஆண்டிலேயே நடத்த வேண்டும். அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி, வேலை கிட்டாத இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com