

ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அவரவர் படித்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவ-மாணவிகள் விடைத்தாள்களின் ஒளிநகல் பெற, விடைதாள்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர்www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொண்டு அதனை பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டண தொகையை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்று (புதன்கிழமை) காலை 11 மணி முதல் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். அதற்குப் பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விடைத்தாள் ஒளி நகல் வேண்டி விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.275-ம், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு பாடத்திற்கு ரூ.205-ம் செலுத்த வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் முதல்வர் தெரிவித்துள்ளார்.