நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி விவகாரத்தில் நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. #Nithyananda #highcourt #MadrasHC
நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை
Published on

சென்னை

மதுரை ஆதினத்தின் 293 வது மடாதிபதியாக நித்யானந்தா அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

மதுரை ஆதினம் வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யாத நித்தியானந்தாவுக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால் கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு பிறப்பிப்பேன் என்று நீதிபதி கண்டிப்புடன் தெரிவித்தார்.

தவறான தகவல் அளித்ததாக நித்தியானந்தா தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் சீடர் கைப்பேசி பயன்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்தவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற நடைமுறையை வாட்சப் மூலம் அனுப்பிய நித்தியானந்தா சீடரில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி விவகாரத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் பதில் மனுதாக்கல் செய்யாவிட்டால் நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் உத்ததரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com