தி.மு.க அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு- எடப்பாடி பழனிசாமி

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கோடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளது தி.மு.க. அரசு என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
தி.மு.க அரசின் நிர்வாக தோல்வியை மறைக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு- எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினர். அவர்களுடன் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் சென்று இருந்தனர்.

கவர்னருடனான சந்திப்புக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;

தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது.ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் என்று தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வேண்டுமென்றே வழக்கு போட்டுள்ளனர்.

அ.தி.மு.க. அரசு இருக்கும்போது சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியிடப்பட்டன. அதை வைத்து இப்போது வழக்குத் தொடர்கிறார்கள். அது கண்டிக்கத்தக்கது

தேர்தல் வாக்குறுதியாக கோடநாடு வழக்கு மறு விசாரணை செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் கூறுவதை ஏற்க இயலாது.

கோடநாடு சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை முடிவடையும் தருணத்தில் தி.மு.க. அரசு, அதனை புதிதாக விசாரிக்க வேண்டுமென கூறுகிறது. தேர்தல் வாக்குறுதி அளித்ததற்காகவெல்லாம் விசாரிக்க முடியாது. இதை சட்டப்படி செய்யவேண்டும்

கோடநாடு கொலை வழக்கில் மறுவிசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த குற்றப்பின்னணி கொண்ட சயான் உள்ளிட்டவர்களுக்கு தி.மு.க. ஆதரவு அளிப்பது ஏன்?

சயான் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தி.மு.க. வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர்.

நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் சயானிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.கொடநாடு வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மறுவிசாரணை ஏன்?

100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படவில்லை, தி.மு.க. அரசு முடக்கியுள்ளது.ஊழியர்களை பணியிட மாற்றம் செய்தது தான் தி.மு.க. அரசின் 100 நாள் சாதனை. தி.மு.க அரசின் 100 நாட்கள் சாதனைகளில் மக்கள் வேதனை அடைந்து உள்ளார்கள்.

கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை தற்போதைய அரசு கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடங்கியுள்ளது.

நீட் வழக்கில் பொய்யான கருத்தை மக்களிடம் கூறியுள்ளது தி.மு.க.

2006-2011 தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீதான வழக்குகளை முடிப்பதில் தீவிரம் காட்டுகிறார்கள்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுகிறார்கள் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com