வேலையை தேடிச்செல்லாமல் உருவாக்க வேண்டும்; மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அறிவுரை

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
வேலையை தேடிச்செல்லாமல் உருவாக்க வேண்டும்; மாணவர்களுக்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் அறிவுரை
Published on

அப்போது அவர் கூறியதாவது:-

பட்டம் முடித்துவிட்டு வெளியே வந்து உள்ள மாணவர்களாகிய நீங்கள் எந்த துறையை தேர்வு செய்து உள்ளீர்களோ அந்த துறையில் சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்க வேண்டும். அதில் பல தோல்விகள் வந்தாலும் அதை கண்டு துவண்டுவிடாமல் தோல்வியை சாதகமாக பயன்படுத்தி அந்த துறையில் உயர வேண்டும்.

நான் அரசு பள்ளியில்தான் படித்தேன். உயர்கல்வி படித்துவிட்டு இஸ்ரோ வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் அப்போது எனக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் நான் கவலைப்பட்டு முடங்கவில்லை. தொடர்ந்து லட்சிய பாதையில் பயணித்துக்கொண்டே இருந்தேன். அதன் விளைவு எந்த நிறுவனம் என்னை நிராகரித்ததோ அதே நிறுவனத்தில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். எனவே எக்காரணத்தைக்கொண்டும் லட்சியத்தை மாணவர்கள் கைவிடக்கூடாது.

தற்போது பட்டம் பெற்று உள்ள நீங்கள் வேலை தேடி ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அலையக்கூடாது. வேலையை தேடிச்செல்லாமல் நீங்களே வேலையை உருவாக்குபவர்களாக இருந்து பலருக்கு வேலையை கொடுக்க வேண்டும். உங்களுக்கு நீங்களே முன்மாதிரியாக இருக்க வேண்டும். வேறு யாரையும் மாதிரியாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com