

சென்னை
ஊதிய நிலுவைத்தொகை, ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை முதல் அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினர் ஸ்டிரைக்கில்
ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று மாலை முதல் அரசு பஸ்கள் ஓடவில்லை. பல இடங்களில் பயணிகள் நடுவழியில் இறக்கி விடப்பட்டனர். சென்னையில் நேற்றிரவு 90 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் இன்று 2-வது நாளாக தமிழ் நாடு முழுவதும் பொது மக்கள் கடும் பாதிப்புக் குள்ளானார்கள். தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் நிறுத்தப்பட்டதால் வெளி மாநிலத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று காலை தவிப்புக்குள்ளானார் கள். பஸ்கள் இல்லாத தால் அவர்கள் ரெயில், ஷேர் ஆட்டோக்களை நாட வேண்டியதிருந்தது. இதையடுத்து முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், போக்கவரத்து வேலை நிறுத்தம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள் உள்ளிட்டடோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
#Transport | #BusStrike | #EdappadiPalaniswami | #TransportStrike