துர்க்கை அம்மனுக்கு வருசாபிஷேக விழா

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலில் துர்க்கை அம்மனுக்கு வருசாபிஷேக விழா நடந்தது.
துர்க்கை அம்மனுக்கு வருசாபிஷேக விழா
Published on

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேசுவரர் கோவிலில் துர்கை அம்மன் சன்னதி அமைந்து உள்ளது. இந்த சன்னதியில் 52-வது வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதே போன்று நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com