கருங்கல்பாளையம் சந்தைக்கு650 மாடுகள் விற்பனைக்கு வந்தது

கருங்கல்பாளையம் சந்தைக்கு 650 மாடுகள் விற்பனைக்கு வந்தது.
கருங்கல்பாளையம் சந்தைக்கு650 மாடுகள் விற்பனைக்கு வந்தது
Published on

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு 100-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவைகள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

350 பசுமாடுகள், 300 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.65 ஆயிரம் வரையிலும் விலை போனது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து சரக்கு வாகனங்களில் ஏற்றி சென்றார்கள்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com