

சென்னை
ஐஏஎஸ் அதிகாரி தரேஸ் அகமது தலைமையில் 4 பேர் கொண்ட சிறப்பு இணை பணிக்குழு அமைத்து தமிழக அரசு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், மருத்துவ ஆக்ஸிஜன் ஒதுக்கீடு, விநியோகம் உள்ளிட்டவற்றை 4 பேர் கொண்ட சிறப்பு இணைக் குழு கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்வதில் உள்ள தாமதத்தைக் குறைத்து உரியவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை இதன் மூலம் உறுதி செய்ய இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.