டெங்கு பரவவிடாமல் தடுக்க திறந்த நிலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும்- கலெக்டர் அறிவுரை

டெங்கு பரவவிடாமல் தடுக்க திறந்த நிலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
டெங்கு பரவவிடாமல் தடுக்க திறந்த நிலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும்- கலெக்டர் அறிவுரை
Published on

ஆற்காடு

டெங்கு விடாமல் தடுக்க திறந்த நிலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த வேண்டும் என சிறப்பு மனுநீதிநாள் முகாம் கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

சிறப்பு மனுநீதிநாள் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஊராட்சி ஒன்றியம் புங்கனூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். 209 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே 17 லட்சத்தி 6 ஆயிரத்து234 மதிப்பிட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கி பேசியதாவது:-

நாம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுத்து இளம் வயதிலேயே சாப்பிட்டு பழக்கி விட வேண்டும். குழந்தைகளிடம் பக்குவமாக நடந்து அவர்களுக்கு நன்மை எது தீமை எது என்பதை சொல்லித் தர வேண்டும். ஏனென்றால் வெளியில் குழந்தைகளை சீரழிக்க ஒரு கூட்டமே காத்துக் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட வயது வரை அவர்களை பக்குவமாக பார்த்து கொண்டாள் அதன் பிறகு அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

கிராம அளவில் பெரும்பாலான பகுதிகளில் திறந்த வெளி கழிப்பிட பயன்பாடு அதிகமாக உள்ளது. அதனை தவிர்த்து நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் அதனை சொல்லி பழக்கி விட வேண்டும்.

அரசாங்கம் நம் சுகாதாரத்தினை கருத்தில் கொண்டு ஆங்காங்கே கழிப்பிட வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதனை சுத்தமாக வைத்துக் கொள்வது நம் அனைவரின் கடமையாகும்.

திறந்த வெளியில் தண்ணீர்

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஆங்காங்கு குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தங்கள் இருப்பிடங்களில் திறந்த வெளியில் தேங்கிய நல்ல தண்ணீர், திறந்த வெளியில் உள்ள தண்ணீர், குளிர் சாதன பெட்டியின் பின்னால் தேங்கியுள்ள தண்ணீர் ஆகியவற்றை அப்புறப்படுத்துங்கள். தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை சென்று பரிசோதனை செய்யுங்கள். தொடர்ந்து கை வைத்தியம் பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள். ஆரம்ப நிலையிலேயே டாக்டரை அணுகும் போது சீக்கிரம் நோயிலிருந்து விடுபடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட உதவி கலெக்டர் வினோத்குமார் சமூக பாதுகாப்புத்துறை உதவி கலெக்டர் தாரகேஸ்வரி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின அலுவலர் முரளி ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன நல அலுவலர் (பொறுப்பு) மணிமேகலை ஊராட்சி மன்ற தலைவர் அம்பேத்கர் அனைத்து துறை சார்ந்த அரசுஅலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் திமிரி ஒன்றியம் காவலூரில் இருந்து புங்கனூர், புதுபுங்கனூர் வழியாக வண்டிகள் வரையிலும் புதுபுங்கனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து குப்பம், பாரதி நகர் வழியாக வெங்கடாபுரம் வரையிலும் இருபுறமும் பள்ளங்கள் அதிகமாக இருப்பதால் அதனை சீர் செய்து தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் சேட்டு கலெக்டரிடம் மனு அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com