சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

தகைசால் தமிழர் விருதை பெறும் என்.சங்கரய்யாவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு.
சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- எந்த விருதை எவருக்கு வழங்க வேண்டுமோ, அதை உரிய நேரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். இதன்மூலம் சங்கரய்யாவின் அர்ப்பணிப்புமிக்க, தூய்மையான, எளிமையான, நேர்மையான பொதுவாழ்வுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:- சங்கரய்யாவுக்கு அளித்த விருது, தமிழர் ஒருவர் அவரது மாணவ பருவம் தொட்டே பொதுத்தொண்டில் சுயமரியாதை இயக்கத்தில் தொடங்கி பொதுவுடைமை கொள்கையில் பூத்து, காய்த்து, கனிந்து, தொண்டில் பழுத்தவருக்கு சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட விருது. இந்த விருதை அறிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் பாராட்டுகள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com