ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
Published on

தூத்துக்குடியை சேர்ந்தவர் கிதர்பாய். ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று கருப்பட்டி அலுவலகம் சந்திப்பு சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி தாய்நகரை சேர்ந்த பரமசிவன் மகன் காளிராஜ் என்ற கட்டகாளி (வயது 39) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார். அவரிடம் இருந்து தப்பிய கிதர்பாய் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டக்காளியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கட்டகாளி மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com