கலெக்டரிடம், பூங்கோதை ஆலடி அருணா மனு

ஆலங்குளம் தாலுகா புதுப்பட்டியில் அரசு உள் விளையாட்டு அரங்கம் அமைக்க 5 ஏக்கர் நிலம் வழங்க தயார்-கலெக்டரிடம், பூங்கோதை ஆலடி அருணா மனு
கலெக்டரிடம், பூங்கோதை ஆலடி அருணா மனு
Published on

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷிடம், முன்னாள் எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

ஆலடி அருணா அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்களில் ஒன்றானது கல்வி, விளையாட்டு துறை வாயிலாக இளைய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்பதே ஆகும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதியிலும் உலகத்தரம் வாய்ந்த உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்துள்ளார். எனவே ஆலடி அருணா அறக்கட்டளை, அரசு உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ஆலங்குளம் தாலுகா புதுப்பட்டி கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை வழங்க தயாராக உள்ளது. இந்த விளையாட்டு அரங்கம் சர்வதேச அளவில் உருவாகிட அறக்கட்டளை வாயிலாக உதவிட விரும்புகிறோம். இதன்மூலம் ஆலங்குளம் பகுதியில் விளையாட்டு துறையில் மாணவ- மாணவிகள் உயர்ந்திட பங்களிக்க விரும்புகிறேன்.

மேலும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து பொதுமக்கள் சார்பாக என்னிடம் கொடுக்கப்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை பெற விண்ணப்ப மனுக்களை இத்துடன் இணைத்துள்ளேன். அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com