கோவில் பணியாளர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பணம்- இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

கோவில் பணியாளர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பணம் அனுமதி அளித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கோவில் பணியாளர்களுக்கு ரூ.1,000 பொங்கல் பணம்- இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு
Published on

சென்னை:

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000 வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. முழுநேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.

2019- 2020-ம் ஆண்டு 240 நாட்களும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.1,000-மும், 6 மாதத்திற்கு மேல் 240 நாட்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com