பெங்களூருவில் இருந்து தென்காசிக்கு ஆம்னி பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல்: 3 பேர் கைது

பெங்களூருவில் இருந்து தென்காசிக்கு ஆம்னி பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் இருந்து தென்காசிக்கு ஆம்னி பஸ்சில் புகையிலை பொருட்கள் கடத்தல்: 3 பேர் கைது
Published on: 

பெங்களூருவில் இருந்து தென்காசிக்கு வரும் ஆம்னி பஸ்சில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக புளியங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்சை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 2 கிலோ எடை கொண்ட ரூ.2,600 மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த பஸ் டிரைவரான டி.என். புதுக்குடி கற்பக வீதி தெருவை சேர்ந்த குருசாமி மகன் சதீஷ் (வயது 27), செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (27), பஸ் கிளீன ரான இடைகால் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் கபில் ராஜ் (21) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

X