தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் கடத்தல்: 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது


தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் கடத்தல்: 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
x

தூத்துக்குடியில் புகையிலை பொருட்கள் கடத்தல் வழக்கில் 3 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42), வடிவேல்முருகன்(44) மற்றும் மகேஷ்வரன்(30) ஆகிய 3 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, மாவட்ட எஸ்.பி.க்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளின்படி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் மேற்சொன்ன 3 பேரும் நேற்று தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story