தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
Published on

சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. அதிலும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை நோக்கி பயணித்தது. சவரன் ரூ.48 ஆயிரம், ரூ.49 ஆயிரம் என்ற நிலையை கடந்து விற்பனை ஆனது.

தொடர்ந்து 10 நாட்களாக விலை அதிகரித்து, கடந்த 13-ந் தேதி விலை குறைந்து காணப்பட்டது. இதனால் தங்கம் விலை ரூ.49 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. மீண்டும் மறுநாள் (14-ந் தேதி) விலை அதிகரித்தும், அதற்கு அடுத்த நாள் (15-ந் தேதியில்) முதல் அதன் விலை சரியத்தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக விலை குறைந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.40 உயர்ந்து ரூ.49,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.6,140-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com