

சென்னை,
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பெய்தாலும், பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 6 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் இன்று அதிகமாக வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு:-
வேலூர் - 104.9° பாரன்ஹீட் (40.5° செல்சியஸ்)
ஈரோடு - 103.64° பாரன்ஹீட் (39.8° செல்சியஸ்)
திருச்சி - 102.38° பாரன்ஹீட் (39.1° செல்சியஸ்)
கரூர் பரமத்தி - 101.3° பாரன்ஹீட் (38.5° செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 101.12° பாரன்ஹீட் (38.4° செல்சியஸ்)
நாமக்கல் - 100.22° பாரன்ஹீட் (37.9° செல்சியஸ்)