பெரம்பலூரில் இன்று நடக்கிறது: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

பெரம்பலூரில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பெரம்பலூரில் இன்று நடக்கிறது: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
Published on

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடக்கிறது. எனவே முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது காலிப்பணியிடங்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளதால் இம்முகாமிற்கு 10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த இருபாலரும் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார் துறை நிறுவனங்களும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com