குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது
குரூப்-2, 2ஏ முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், 2024-ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி கடந்த மாதம் (ஜூன்) 20-ம் தேதி வௌயிட்டது. குரூப்-2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குரூப்-2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஏற்கனவே, விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் தேர்வர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய முடியும். இதற்கான, காலஅவகாசம் நிறைவடைந்த பிறகு, விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்படாது என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com