இன்று மின் நிறுத்தம்

கும்பகோணத்தில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இன்று மின் நிறுத்தம்
Published on

கும்பகோணம்;

கும்பகோணத்தில் பல்வேறு இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றும் பணி இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் பக்தபுரி தெரு மெயின் ரோடு, பாணாதுரை பத்துக்கட்டு தெரு, பச்சயப்பா தெரு, மூங்கில் கொள்ளை தெரு, டபீர் தெரு மற்றும் காசிராமன் தெரு ஆகிய பகுதிகளில் இன்று(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.திருபுறம்பியம் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை)) பராமாப்பு பணிகள் நடக்கிறது. எனவே திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாழாபுரம், மேலாத்துகுறிச்சி, நீலத்தநல்லூர், இணைபிரியாள் வட்டம், காவர்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாம்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திரு வைகாவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், சுவாமிமலை, திம்மக்குடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூர், மருத்துவக்குடி, நாகக்குடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏறகரம், கொட்டையூர், ஜாமியா நகர், மூப்ப கோவில், வளையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தர பெருமாள் கோவில், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com