இன்று தி.மு.க. தென்மண்டல இளைஞர் அணி மாநாடு: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார்.
இன்று தி.மு.க. தென்மண்டல இளைஞர் அணி மாநாடு: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் திட லில் தி.மு.க. தென்மண்டல இளைஞர் அணி மாநாடு இன்று (சனிக்கி ழமை) மாலையில் நடக்க இருக்கிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இதுகுறித்து விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச் சருமான தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தென் மண்டலத்தில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10 வருவாய் மாவட்டங்கள், தி.மு.க. அமைப்பு ரீதியாக 20 மாவட் டங்கள் மற்றும் 58 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், கிளை, வார்டு, பூத் அளவிலான அனைத்து நிலை இளைஞரணி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தகுதியான சுமார் 1 லட்சம் நிர்வாகிகள், தொண்டர்கள் பங் கேற்க உள்ளனர்.

Also Read
எதற்காக தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டும்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கம்
இன்று தி.மு.க. தென்மண்டல இளைஞர் அணி மாநாடு: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அரசாணைகளை முழுமையாக பின்பற்றி உரிய துறைகளிடமிருந்து அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனம் நிறுத்தும் வசதி, உணவு, குடிநீர், கழிவறைகள், ஒலி-ஒளி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

ஏற்பாட்டு பணிகளை அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த மாநாட்டில் வெளியாக வாய்ப்பு உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com