“தி.மு.க. கூட்டணி கட்சி தலைவரின் மனைவியே தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று.. ” - எடப்பாடி பழனிசாமி

மாற்றுத்திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாக கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
“தி.மு.க. கூட்டணி கட்சி தலைவரின் மனைவியே தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று.. ” - எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை உயர்வு கோரி மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நள்ளிரவில் கைது நடவடிக்கை என்ற பெயரில் திமுக அரசின் காவல்துறை மாற்றுதிறனாளிகள் என்றும் பாராமல், சென்னை முழுவதும் அலைகழித்து , வன்முறைத் தாக்குதல் நடத்தி அவர்களை கைது செய்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

காவல்துறையின் ஈவு இரக்கமற்ற தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவரும், தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்களின் மனைவியுமான திருமதி. பா. ஜான்சிராணி அவர்கள் படுகாயமைடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவரின் மனைவியே காவல்துறை தாக்குதலுக்கு ஆளாகும் நிலைதான் இன்று, தமிழக அரசு அனைத்து விதமான "கோரிக்கைக் குரல்களை" ஒடுக்கப் நினைப்பதுதான் தி.மு.க.-வினுடைய Fascist mentality-க்கான Proof!

ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கொள்கையாகக் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் மீது கருணையின்றி நள்ளிரவு முழுவதும் அலைகழித்து , அடிப்படை உரிமைகளை கூட மறுத்து , தாக்குதல் நடத்தியுள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

மாற்றுத் திறனாளிகள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளை முழுமையாகக் கைவிட வேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com