இன்றைய மேட்டூர் அணை நிலவரம்

இன்றைய மேட்டூர் அணை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்த போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடிகள் ஆகும். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 99.57 அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று வினாடிக்கு 68 கன அடியாக இருந்த நிலையில் இன்று 80 கன அடியாக அதிகரிதுள்ளது. மேட்டூர் அணையில் இன்று 64.28 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com