

சென்னை,
பெட்ரோல், டீசல் விலை கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி முதல் தினசரி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு வரை பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட்டதில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்தது.
அந்த வகையில் கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்திலும் அதன் விலை எகிறியது. இதனால் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டு கொண்டே வந்தது.
அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை ஆனது. இது தான் அதிகபட்ச பெட்ரோல், டீசல் விலையாக பேசப்பட்டது.
அதன்பின்னர், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வந்தது. கடந்த மாதம் இறுதி வரை உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை, தமிழகத்தில் தேர்தல் நேரமாக இருப்பதால் மாற்றம் இல்லாமல் இருந்து வருகிறது என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, பெட்ரோல், டீசல் லிட்டருக்கு தலா 16 காசு குறைந்திருந்தது. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிறகு, அதன் விலை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் 3-வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92.77க்கும் டீசல் ரூ.86.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.