சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 92.59 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.98 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல்-டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில் கொரோனாவுக்கு பிறகு தேவை அதிகரித்துள்ளதை தொடர்ந்து சுமார் ஓராண்டுக்குப்பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 61 டாலரை எட்டியுள்ளது.

இது இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் எதிரொலித்து வருகிறது. அது மட்டுமின்றி இந்தியாவில் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு முறையே 61 சதவீதம் மற்றும் 56 சதவீதம் வரியை மத்திய-மாநில அரசுகள் விதிக்கின்றன. இதனாலும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது.

கடந்த ஒருவார காலமாகவே ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலையில் 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் 92.59 ரூபாய் எனவும், டீசல் விலையில் மாற்றமின்றி லிட்டருக்கு 85..98 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com