சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 84.14 ரூபாய், டீசல் லிட்டருக்கு 75.95 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on

சென்னை,

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 27வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.

டீசல் விலையிலும் 17 வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com