சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 83.87 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Published on


சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், ஜூன், 27ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 83.59 ரூபாய்க்கும்; டீசல், 77.61 ரூபாய்க்கும் விற்பனையானது.அடுத்த நாள், லிட்டர் பெட்ரோல், 83.63 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின், அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலை, அவ்வப்போது மாற்றப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம், 78.86 ரூபாயாக இருந்தது.

இந்தநிலையில் 48 நாட்களுக்கு பின், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு, 12 காசுகள் உயர்ந்த நிலையில்,

இன்றும் 12 காசுகள் உயர்ந்து, ரூ.83.87 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com