இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.69 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.46 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது. சென்னையில் 21 வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை இன்று 23 காசுகள் உயர்ந்து ரூ.93.69க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com