மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை

சுங்கக் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை
Published on

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள எலியார்பத்தி என்னும் இடத்தில் அமைந்துள்ள சுங்கச் சாவடியில் கடந்த 2011-ஆம் ஆண்டுமுதல் எந்த பராமரிப்புப் பணியும் செய்யப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. பேருந்துகள் அடிக்கடி பழுதாகின்றன. மேலும், அடிக்கடி விபத்துகளும் நிகழ்கின்றன.

இதனையடுத்து, சேதமடைந்துள்ள சாலையை முழுமையாகச் சீரமைக்கும் வரை எலியார்பத்தியிலும் புதூர் பாண்டியபுரத்திலும் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதிக்கவேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து அறிக்கை அளிக்க ஆணையிட்டுள்ளதுடன், எலியார்பத்தி சுங்கச் சாவடி, புதூர் பாண்டியபுரம் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com