ரேஷன் அரிசி கடத்தல் குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்

நாகை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களுடன் போஸ்டர் அடித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒட்டினர்.
ரேஷன் அரிசி கடத்தல் குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்
Published on

நாகை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்த புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்களுடன் போஸ்டர் அடித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒட்டினர்.

ரேஷன் அரிசி கடத்தல்

தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவுபடி ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கள் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இலவச தொலைபேசி எண்

தற்போது பொதுமக்களிடையே ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் 18005995950 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நாகை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், ரேஷன் கடைகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் புகார் எண்களுடன் கூடிய போஸ்டர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ரேஷன் பொருட்கள் கடத்தல் குறித்து தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என உணவு பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com