ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில்தக்காளி திருட்டை தடுக்க தோட்டங்களில் வேலி அமைப்பு

ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில்தக்காளி திருட்டை தடுக்க தோட்டங்களில் வேலி அமைப்பு
Published on

ஓசூர்:

ஓசூர் பகுதியில் தக்காளி திருட்டை தடுக்க தோட்டங்களில் வேலி அமைத்து விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விலை உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் காய்கறி சாகுபடி செய்துள்ளனர். இதில் தக்காளி மட்டும் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் நோய் தாக்கம் காரணமாக தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டதால் வரத்து குறைந்தது.

தக்காளியை அனைத்து தரப்பு மக்களும் தினமும் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்ற நிலையில் அதன் விலை தற்போது வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தோட்டத்தில் பாதுகாப்பு

இதனால் தக்காளியை நடுத்தர மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விளைச்சல் கடும் வெயில், மழை மற்றும் நோய் தாக்கம் காரணமாக பெரும்பாலான தோட்டங்கள் அழிந்துவிட்டது. மீதமுள்ள தோட்டங்களில் விளையும் தக்காளியை விவசாயிகள் பறித்து ஓசூர் சந்தை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் தக்காளியின் விலை கிடுகிடு என உயர்ந்து விட்டதால் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தக்காளியை பறித்து செல்கின்றனர். இதனால் விவசாயிகள் தோட்டங்களில் தக்காளி திருட்டை தடுக்க முள் வேலி அமைத்தும், தோட்டத்தை சுற்றி கோணிப் பை விரிப்பு அமைத்து இரவு, பகலாக கண்விழித்து காவல் பாதுகாத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com