வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.46-க்கு விற்பனை

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.46-க்கு விற்பனை
Published on

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் தக்காளி உற்பத்தி குறைந்ததால் அதன் விலை கிலோ ரூ.100- ஐ கடந்தது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததால் படிப்படியாக விலை குறைய தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 1 கிலோ 50-க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி விலை ரூ.55- ஆக அதிகரித்தது. வரத்து குறைந்த நிலையில் தேவை சற்று அதிகரித்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. அதே நேரத்தில் தேவை சற்று குறைந்தது. இதனால் நேற்று தக்காளி விலை கிலோவிற்கு ரூ.9 குறைந்தது.தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.46- க்கு விற்பனையானது. வெளிமார்க்கெட்டுகளில் ரூ.55 முதல் ரூ.65 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com