தக்காளி விலை கடும் வீழ்ச்சி

அய்யலூர் சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தக்காளி விலை கடும் வீழ்ச்சி
Published on

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. தினமும் நடைபெறும் இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தக்காளிகள் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன. திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் நாளொன்றுக்கு 100 டன்னுக்கும் அதிகமாக தக்காளிகள் விற்பனை நடைபெறும். இதனால் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. சந்தையில் உள்ளூர் தக்காளி வரத்து குறைவாக உள்ளபோது ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநில தக்காளிகளும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே மாவட்டத்தில் தக்காளியின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையாக அய்யலூர் திகழ்ந்து வருகிறது.

இந்தநிலையில் தற்போது அய்யலூர் சந்தைக்கு உள்ளூர் தக்காளிகள் வரத்து இல்லை. இருப்பினும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநில தக்காளிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக 14 கிலோ எடை கொண்ட பெட்டி ஒன்று ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சியடைந்து பெட்டி ஒன்று ரூ.100-க்கு  விற்பனை செய்யப்பட்டது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com