கரூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

கரூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிப்பு
Published on

கல்லறை திருநாளையொட்டி நேற்று கரூர் சர்ச் கார்னர், பாலம்மாள்புரம் பசுபதிபாளையம், புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களை கிறிஸ்தவர்கள் கழுவி சுத்தம் செய்தனர். பின்னர் பூக்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி, ஊதுபத்தி ஆகியவற்றை ஏற்றி வைத்தனர். அப்போது பாதிரியார்கள் தலைமை தாங்கி திருப்பலி நடத்தினர். பின்னர் இறந்தவர்களின் இலைப்பாட்டிற்காக அவர்களது குடும்பத்தினர் உறவினர்கள், கன்னியாஸ்திரிகள் மனம் உருகி ஜெப புத்தகத்தை படித்து பாடல்களை பாடினர். பின்னர் கல்லறைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அவர்கள் கண்களை மூடி அமைதியாக பிரார்த்தனை செய்து, மறைந்த உறவினர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி தங்களின் குடும்பத்தினருக்கு ஆசி வழங்க வேண்டி கொண்டனர். இதற்கு இடையே இறந்தவர்களின் கல்லறையில் பாதிரியார்கள் புனித நீரை தெளித்து தீர்த்த ஆசீர்வாதம் வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com