காஞ்சீபுரம் உள்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

காஞ்சீபுரம் உள்பட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம் உள்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
Published on

சென்னை,

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

வருகிற அக்டோபர் 12ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கு நாளை சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com