திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (15-ந்தேதி) மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவள்ளூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, வங்கக்கடலில் தென்கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (15-ந்தேதி) மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com