தூத்துக்குடி, நெல்லையில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லையில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு
Published on

தூத்துக்குடி,

அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரம் திங்கள்கிழமை 2-வது நாளாக தத்தளித்து வருகிறது. குறிப்பாக, தாமிரபரணி கரையோர பகுதி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாயினர்.மாநகரில் வீடுகள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட பல பகுதிகளிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், தூத்துக்குடியிலும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள்,அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com