சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம்

பயணிகளின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களின் பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணம் வழங்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரெயிலில் ரூ.5 கட்டணத்தில் நாளை பயணிக்கலாம்
Published on

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த நவம்பர் மாத்தில் மட்டும் 80 லட்சத்து ஆயிரத்து 210 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக நவம்பர் 10-ந்தேதி 3 லட்சத்து 35 ஆயிரத்து 677 பேர் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரெயில் நிறுவனம் கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ் அப் டிக்கெட் போன்ற பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, நாளை (3-ந்தேதி) ஒரு நாள் மட்டும் கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் செய்யலாம்.பயணிகளின் ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களின் பாராட்டுக்கு அடையாளமாக இந்த சிறப்பு கட்டணம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com