போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
Published on

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் சோ.கி.கல்யாணி தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார்.கல்லூரியின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர் மற்றும் சுற்றுலாவியல் துறையின் தலைவர் விஜய் ஆனந்த் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் கலந்து கொண்டு போதைப் பொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்தும் போதையில்லாத வாழ்வின் நன்மை குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் உரை ஆற்றினார்.

அதைத் தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை சூப்பிரண்டு வாசிக்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா உள்ளிட்ட மாணவ-மாணவிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மனோகர்செந்தூர்பாண்டி ஒருங்கிணைத்தார். நிறைவாக கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com